K U M U D A M   N E W S

உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை.. ஏராளமானோர் பங்கேற்பு!

மேலூரில் முத்துமாரியம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

இந்தியாவிற்கு வருகை தரும் கால்பந்து அணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி  தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு வருகைத்தர உள்ளது. கால்பந்து உலகின் மன்னன் லியோனல் மெஸ்ஸி 14 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வருவது, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டரி வாகனங்கள் யூஸ் பண்ணுங்க.. இஸ்ரோ விஞ்ஞானி கொடுக்கும் அட்வைஸ்!

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் ஏழு  சிறுவர் சிறுமியர்கள் 8 உலக சாதனை..!

பட்டுக்கோட்டையில் 7 சிறுவர், சிறுமியர்கள் உலக சாதனைப்படைத்த நிலையில், நோபல் நிறுவனத்திலிருந்து இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அமெரிக்க செல்ல 41 நாடுகளுக்கு தடை அதிரடி காட்டும் டொனால்டு டிரம்ப்..!

சட்டவிரோதமாக குடியேறிவர்கள் என்று கூறி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி வரும் டிரம்ப் அரசு, அதன் அடுத்தக்கட்டமாக 41 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

6,000 பேரை கொன்று குவித்த பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்..? நீதிமன்றம் வைத்த செக்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான் ரயில் கடத்தல்.. சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.. முழு விவரம்

பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தில் பலுச் அமைப்பினர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 214 வீரர்களை மட்டும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவருவதற்கான பணியை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டிந்த நிலையில், அதனை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடுத்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கம் கடத்திய விக்ரம் பிரபு பட நடிகை.. சிக்கியது எப்படி..? பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி யார்..?

Actress Ranya Rao Arrest in Bengaluru Airport : பெங்களூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கில் பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.