K U M U D A M   N E W S

உயர்நீதிமன்றம்

அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு புதிதாகத் தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள்குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதி காரணமாக கோயிலில் நுழைவைத் தடுக்க முடியாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நதிநீர் பாதுகாப்பு நடவடிக்கை.. 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அந்தரங்க வீடியோ விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்பு விசாரணை – காவல்துறையை கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம்!

பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரத்தில், அப்பெண்ணின் முன்பு ஆண் காவலர்கள் விசாரணை செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்

ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு!

போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது. இருவரின் ஜாமின் மனுக்களையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்எஸ்சி எல்சா-3 கப்பல் விபத்து: எம்எஸ்சியின் அகிடேட்டா-2 கப்பலை சிறை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு!

எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.