K U M U D A M   N E W S
Kumudam Ad

அரசு

#BREAKING : துணை முதலமைச்சராகும் உதயநிதி.. வெளியானது உறுதியான தகவல்

Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. நேற்று அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... தமிழக அரசின் திடீர் உத்தரவு.. கொந்தளிக்கும் மக்கள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

2,327 அரசு பணியிடங்களுக்கு 7,93,966 பேர் போட்டி.. ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

#JUSTIN : இலங்கை தமிழர் குடியிருப்பின் அவல நிலை

ஆம்பூர் அருகே திறந்து ஒரு மாதத்திற்குள் பெயர்ந்து விழுந்த இலங்கை தமிழர் குடியிருப்பின் மேல்தள பூச்சுகள். மின்னூர் பகுதியில் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி திறப்பு

100 Days of PM Modi 3.0 : 100 நாட்களில் பிரதமர் மோடி செய்தது என்ன?.. ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட அமித்ஷா!

100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.

மத்திய அரசின் 3-வது ஆட்சிக் காலம்! அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தளம்

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Chennai Metro Rail Project : சென்னை மெட்ரோ 2 திட்டம் - நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு

Minister Thangam Thenarasu About Chennai Metro Rail Project: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை 11 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக சுதா சேஷய்யன் நியமனம்!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை என 4 ஆண்டுகள் பணியாற்றிய சுதா சேஷய்யன், இலக்கியவாதி, ஆன்மீகப் பேச்சாளார் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முக முகம் கொண்டவர்.

தரையில் கிடந்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள்.. 'குமுதம் செய்திகள் எதிரொலி'யால் நடவடிக்கை

வெறும் தரையில் பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் படுக்க வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, 'குமுதம் செய்திகள்’ செய்தி வெளியிட்டதை அடுத்து, எம்.எல்.ஏ எழிலரசன் விரைந்து நடவடிக்கை எடுத்தார்.

பண மோசடி வழக்கு: இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.