K U M U D A M   N E W S
Kumudam Ad

அரசு

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது மாணவி தாக்குதல்... போராட்டத்தில் குதித்த ஓட்டுநர், நடத்துநர்கள்

சென்னை குரோம்பேட்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

'தமிழ்நாட்டு பள்ளிகளின் அவலநிலை தெரியுமா?'.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்வி!

''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? - RTI சொல்வது என்ன?

Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.

அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.

இபிஎஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

MahaVishnu: “போலீஸுக்கு கஷ்டம் வேண்டாம்... சென்னைக்கே வருகிறேன்.” வீடியோவில் மகா விஷ்ணு விளக்கம்!

அரசுப் பள்ளியில் ஆன்மிக போதனை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகா விஷ்ணு, வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், எங்கும் ஓடி ஒளியவில்லை, சென்னை வருகிறேன் என ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இஷ்டபடி ரீல் சுற்றிய மகா விஷ்ணு.. சொன்னது ஒன்று செய்தது ஒன்று

தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை

ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.