Intel Layoffs 2024 : 15,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் இன்டெல்.. அதிரடியாக அறிவித்த CEO!
Intel Company Layoffs 2024 Announced : ஜூன் மாத காலாண்டு முடிவில் இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை பதிவு செய்து இருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் பங்குகளும் 19% வரை சரிவை சந்தித்தன. இதனால் மீண்டும் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இன்டெல் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.