வெளியானது தவெக-வின் உறுதிமொழி .. இடம்பெற்றுள்ள முக்கிய வார்த்தைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்ட பின்னர் ஏற்கப்படவுள்ள அக்கட்சியின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.

Aug 22, 2024 - 08:30
Aug 22, 2024 - 08:52
 0
வெளியானது தவெக-வின் உறுதிமொழி .. இடம்பெற்றுள்ள முக்கிய வார்த்தைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்ட பின்னர் ஏற்கப்படவுள்ள அக்கட்சியின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக கட்சியின் உறுப்பினர்களின் சேர்க்கையை ஆன்லைன் மூலம் தீவிரப்படுத்தினார். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் கொடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் அதிகமானது. 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிடுகிறார். 

இதையோட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும் என்று குறிப்பிடுள்ளார். தமிழ்நாட்டின்‌ நலனுக்காக உழைத்து, நம்‌ மாநிலத்தின்‌ அடையாளமாக நம் கொடி மாறப்‌ போகுது என்றும் விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய பின்னர் ஏற்கப்படவுள்ள உறுதிமொழி வெளியாகியுள்ளது. அந்த உறுதிமொழியில், ”நமது நாட்டின் விடுதலைக்காகவும். நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

மேலும் படிக்க: பள்ளிகளில் தொடரும் சோகம்.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்.” என குறிபிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியில் மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதால் இடதுசாரியாக கட்சியை கொண்டு சென்று, இந்தியா கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கருத்து மக்கள் மத்தியில் எழுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow