ஆம்புலன்சில் வந்து தேர்வெழுதிய மாணவர்- நெகிழ்ந்து போன ஆசியர்கள்

ஆம்புலன்ஸ் மூலம் மாணவர் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தார். பின்னர் ஆம்புலன்ஸில் இருந்து சொல்வதைக் கேட்டு எழுபவர் மூலம் தேர்வை எழுதினார்.

Mar 25, 2025 - 15:51
Mar 25, 2025 - 17:11
 0
ஆம்புலன்சில் வந்து தேர்வெழுதிய மாணவர்- நெகிழ்ந்து போன ஆசியர்கள்
ஆம்புலன்சில் வந்து தேர்வெழுதிய மாணவர்

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கியது. இன்றுடன் தேர்வு நிறைவு பெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 மையங்களில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நடக்கிறது. இன்று 25ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. 

மாணவருக்கு கால் முறிவு

அந்த வகையில் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தனியார் பள்ளி மாணவர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்ற இளைஞர் பிளஸ் டூ கணித பிரிவில் பயின்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் படிக்கட்டில் தவறி விழுந்த ரியாஸ் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

Read more: ஆளே இல்ல பட்டாவா..? சிக்கிய தில்லாலங்கடி ஆபிஸர்ஸ்... லெஃப்ட் ரைட் வாங்கிய கலெக்டர்!

ஆம்புலன்சில் வந்து தேர்வெழுதிய மாணவர்

இந்த நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது. இருப்பினும் எழுந்து நடமாட முடியாத நிலையிலும், பொதுத்தேர்வை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் இன்று கணித பிரிவு மாணவர்களுக்கு இயற்பியல் தேர்வு நடைபெற்றது. 

Read more: ஆசிரியர்கள் பணியிடங்கள்.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இதனால், ஆம்புலன்ஸ் மூலம் மாணவர் அங்கு பள்ளிக்கு தேர்வு எழுத வந்தார். பின்னர் ஆம்புலன்ஸில் இருந்தவர் சொல்வதைக் கேட்டு எழுபவர் மூலம் தேர்வை எழுதினார். ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு வந்து மாணவர் ஒருவர் தேர்வு எழுதிய சம்பவம் மாணவர்கள், ஆசியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow