தமிழ்நாடு

ஆளே இல்ல பட்டாவா..? சிக்கிய தில்லாலங்கடி ஆபிஸர்ஸ்... லெஃப்ட் ரைட் வாங்கிய கலெக்டர்!

கலெக்டர் என்றால் காரில் வந்து இறங்கி ரோட்டில் நின்று பார்த்துவிட்டு செல்வேன் என்று நினைத்தீர்களா? என அதிகாரிகளை விளாசி எடுத்தார்.

ஆளே இல்ல பட்டாவா..? சிக்கிய தில்லாலங்கடி ஆபிஸர்ஸ்... லெஃப்ட் ரைட் வாங்கிய கலெக்டர்!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்து வரும் வறுமை கோட்டுக்குகீழ் உள்ள மக்களுக்கு முதல் கட்டமாக 1,189 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதால் நேற்று ராசிபுரத்தில் ஆய்வை முடித்த நிலையில் இன்று திருச்செங்கோட்டில் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார். 

ஆட்சியர் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சுமார் 252 வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பட்டா வழங்க உள்ளதால் முதற்கட்டமாக திருச்செங்கோடு நகராட்சி 25-வது வார்டு பகுதியில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது வேட்டப்பாறை என்னும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உமா ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, கேஸ் புக் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டு வீட்டில் எத்தனை பேர் உள்ளீர்கள்? எவ்வளவு நாட்களாக குடியிருந்து வருகிறீர்கள் என நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார்.

Read more: பிரபல தெலுங்கு நடிகரை காதலிக்கும் ரிது வர்மா?

பல வீடுகளில் மக்கள் இல்லாமல் வீடு பூட்டியும்,  குடியிருக்கும் அடையாளம் இல்லாமல் இருந்ததால் கடுமையாக கோபப்பட்ட மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டீர்களா? இல்லையா? பெரும்பாலும் வீடுகளில் மக்கள் குடி இல்லாமல் வேறு முகவரியில் குடியிருந்து வருகின்றனர்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இந்த முகவரியில் இல்லாதவர்களுக்கு எப்படி பட்டா வழங்க முடியும். இதை ஏன் நீங்கள் இவ்வளவு கவனம் இல்லாமல் செயல்பட்டு வருகிறீர்கள் என கடுமையாக கோபப்பட்டார். அப்பொழுது அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.வருவாய் கோட்டாட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாரா? இல்லையா? என வட்டாட்சியரிடம் கேட்டார். உங்கள் அனைவரையுமே சஸ்பெண்ட் தான் செய்ய வேண்டும். முறையான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

Read more: அடுத்த நான்கு நாட்களுக்கு உஷாரா இருங்க மக்களே.. வானிலை அப்டேட்

கலெக்டர் என்றால் காரில் வந்து இறங்கி ரோட்டில் நின்று பார்த்துவிட்டு செல்வேன் என்று நினைத்தீர்களா என அதிகாரிகளை விளாசி எடுத்தார். நாளையும் வருவேன் வீடுகளில் யாரும் இல்லை என்றால், பட்டா வழங்க மாட்டேன் என கடுமையாக எச்சரித்த மாவட்ட  ஆட்சியர் உமாவின் அதிரடி ஆய்வு அப்பகுதி மக்களையும், அதிகாரிகளையும் கலங்க செய்தது. மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு மற்றும் அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று அதிகாரிகள் மீது ஆட்சியர் கோபப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.