தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரிது வர்மா. இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து மார்க் ஆண்டனி, நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். மேலும் நடிகர் விக்ரமுடன் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
தெலுங்கு நடிகருடன் ரிது வர்மா காதல்
இந்தநிலையில், ரிது வர்மா தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான வைஷ்ணவ் தேஜ் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
Read more:Shihan hussaini: ஷிஹான் ஹுசைனிக்கு ரத்த தானம் செய்ததே என் மகன் தான்- எஸ்.வி.சேகர்
நடிகை ரிது வர்மாவும், வைஷ்ணவ் தேஜ்ஜும் எந்த படத்திலும் இணைந்து நடித்ததில்லை. இருப்பினும் நண்பர்களின் விருந்தில் பங்கேற்றபோது, ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறி இருவரும் சில மாதங்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜை விட ரிது வர்மா 5 வயது மூத்தவர் என கூறப்படுகிறது.
LIVE 24 X 7









