கடந்த 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா... எங்க அதிக மழை தெரியுமா? முழு விவரம் உள்ளே!
சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளை கடந்து, நாளை அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, தரைக்காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப்பகுதிகளில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
மேலும் படிக்க: பெங்களூருவையும் விட்டு வைக்காத கனமழை..துணை முதல்வர் நேரில் ஆய்வு
சென்னையில் அக்.15 முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு (மி.மீட்டரில்):
கத்திவாக்கம் - 248.7
திருவொற்றியூர் - 197.7
மணலி - 195.0
மாதவரம் - 174.3
புழல் - 197.7
தண்டையார்பேட்டை - 168.0
சென்னை சென்ட்ரல் - 125.1
பேசின் பாலம் - 172.8
கொளத்தூர் - 223.8
பெரம்பூர் - 224.4
அயப்பாக்கம் - 222.6
அம்பத்தூர் - 171.6
அமிஞ்சிக்கரை - 161.7
அண்ணாநகர் மேற்கு - 204.0
ஐஸ் ஹவுஸ் - 134.1
நுங்கம்பாக்கம் - 133.8
வடபழனி - 147.6
மதுரவாயல் - 144.9
வளசரவாக்கம் - 132.3
ஆலந்தூர் - 58.5
முகலிவாக்கம் - 127.8
மீனம்பாக்கம் - 122.2
அடையாறு - 84.9
ராஜா அண்ணாமலை புரம் - 109.8
வேளச்சேரி - 185.1
மடிப்பாக்கம் - 102.0
பெருங்குடி - 103.4
சோழிங்கநல்லூர் - 110.4
உத்தண்டி - 116.4
What's Your Reaction?