பெங்களூருவையும் விட்டு வைக்காத கனமழை..துணை முதல்வர் நேரில் ஆய்வு
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளை கடந்து, நாளை அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, தரைக்காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தை போன்று பெங்களூருவிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக பெங்களூரு மெஜஸ்டிக், சாந்திநகர், கேஆர் மார்க்கெட், விதான சவுதா, சிவாஜிநகர், பசவனகுடி, ஜெயநகர், ஹனுமந்தநகர், மல்லேஸ்வரம், யேசவந்தபுரா, ஜலஹள்ளி, தாசரஹள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் பெங்களூரில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!
பெங்களூரு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மழையால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்த டி.கே.சிவக்குமார், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
What's Your Reaction?