K U M U D A M   N E W S

mi

சென்னையில் மலர் கண்காட்சி.. ஜனவரி 2-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஜனவரி 2-ஆம் தேதி  முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை மலர் கண்காட்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அடைக்கப்பட்ட நாதகவினர்.. அடங்க மறுத்து போராட்டம்

சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.

திமுக நடத்தினால் போராட்டம் நாதக நடத்தினால் நாடகமா..? சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியையும் காவல்துறை அதிகாரி வருண் குமாரையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மதுரை to சென்னை நீதிப்பேரணி.. அண்ணாமலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெறவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

2024 தமிழ்நாடு அரசியல் களம்: பிரமோஷன் டூ எக்ஸ்ப்ளோஷன் வரை!

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் சிறிதும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. திமுகவில் பிரமோஷன், அதிமுகவில் எமோஷன், விஜய்யின் Explosion என பரபரப்பாகவே சென்றது 2024. அப்படி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை பின்னோக்கி பார்க்கலாம்...

திமுக அனைத்து வரி உயர்வையும் திரும்ப பெற வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற திமுக-வின்  ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசியல் 2024: மோடி 3.0 டூ அம்பேத்கர் சர்ச்சை வரை...

மோடி 3.0, உயிர்பெற்ற எதிர்க்கட்சிகள், அதிகரித்த வாரிசுகள், எதிர்பாரா தேர்தல் தோல்விகள் என அரசியல் களத்தில் பல டிவிஸ்ட் & டர்ன்ஸ் நிகழ்வுகள் அரங்கேறிய ஆண்டாக 2024 இருந்தது... அப்படி 2024ல் அரங்கேறிய முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்..!

தமிழகத்தில் மீண்டும் பாலியல் தொல்லை.. 3 சிறுமிகளை சீரழித்த 'மிருகம்'

தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக லாரி ஓட்டுநர் பெருமாள்(40) போக்சோ வழக்கில் கைது.

ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.

போதைப்பொருள் வழக்கில் பெண் உட்பட 8 பேர் கைது.. 17  கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருவருப்பு அரசியல் செய்கிறார்.. சேடிஸ்ட் மனநிலையை பழனிசாமி நிறுத்த வேண்டும்- ரகுபதி அறிக்கை

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுராமாக வழங்கிய தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. விஜய் கண்டனம்

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

துண்டு பிரசுரம் வழங்கிய தவெக தொண்டர்கள்.. கைது செய்யப்பட்ட ஆனந்த்.. என்னதான் நடக்குது?

தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பயப்படக்கூடிய கட்சியா..? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

திமுக பயப்படுகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.

ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு 

மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.

மன்மோகன் சிங் மறைவு..முதலமைச்சர் டெல்லி பயணம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. தலைவர்கள் இரங்கல்

கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும் எளிமையாகக் கையாண்ட அரிதினும் அரிதான அரசியல் தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அற்புதமான மனிதர்.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. தமிழிசை உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.