Tamil Nadu Players Won in Chess Olympiad 2024 : செஸ் ஒலிம்பியாட்டில் வென்ற தமிழகத்தின் தங்க மகன், மகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பலமான எதிராளிகளை சமாளித்து வென்றது மன நிறைவாக இருப்பதாக கூட்டாக பேட்டி.
NIA Raids in Chennai : சென்னையில் ராயப்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் NIA சோதனை
Rapido Driver Robbed By Police at Chennai : வேலியே பயிரை மேய்ந்தது போல சிறப்பு உதவி ஆய்வாளர் மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட ரேபிடோ ஓட்டுனர் வேதனை தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘’கண்ணப்பர் திடலில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 40 வருடங்களாக வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கவில்லை’’ என்று ஒருபகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Rowdy Seizing Raja Encounter : சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
Rowdy Seizing Raja : தமிழகம், ஆந்திரா என இரண்டு மாநில காவல்துறையால் தேடப்பட்டவர் தான் ரவுடி சீசிங் ராஜா. யார் இவர்? ஏன் சீசிங் ராஜா என அழைக்கப்படுகிறார்? என்பது குறித்து பார்க்கலாம்.
இன்று ( செப். 22) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Heavy Rain in Tamil Nadu : 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாம்பலம், திருவல்லிக்கேணி,கோவை ஆகிய ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை பார்வதி நாயர் மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவியாளரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.