சென்னையின் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்... மக்கள் பீதி
சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக். 17) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து இன்று (அக். 17) ரூ. 57, 280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம் சென்னையில் இன்று மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது.
கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் சோதனை.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக
ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (அக். 17) விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிப்பு!
சென்னையில் மழையால் பாதித்தவர்களுக்கு உதவ மெகா ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளில் கார்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.
வானிலை முன்னறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.