தமிழ்நாடு

லீவ் கிடையாது... பேக்-அ மாட்டிட்டு கிளம்புங்க! பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லீவ் கிடையாது... பேக்-அ மாட்டிட்டு கிளம்புங்க! பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் (அக். 15) மட்டும் 42 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று (அக். 16)  விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக். 17) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனிடையே, மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும் வடதமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றைய தினம் (அக். 16) சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் லேசான மழை பெய்ததோடு சில இடங்களில் மழை பெய்யவே இல்லை. இதையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த 'ரெட் அலர்ட்' விலக்கி கொள்ளப்பட்டது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். இதே போல்  திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் எனவும் புதுச்சேரியிலும் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.