K U M U D A M   N E W S

ரயில் தண்டவாளத்தில் விழுந்த மரம்.. தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை பாதிப்பு

ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரங்களை குரோம்பேட்டை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் ரயில் போக்குவரத்து சீரானது.

ChennaiRain: சென்னை மழை... டெஸ்ட் மேட்ச் மாதிரி தரமான சம்பவம் இருக்கு... தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புவது நல்லது என, தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.

#JUSTIN: பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு உபகரணங்கள் | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.

#JUSTIN: அடித்து நொறுக்கிய கனமழை; வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள் | Kumudam News 24x7

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன் ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

#JUSTIN: வடகிழக்கு பருவழை: சென்னையில் இயல்பை விட 81% அதிகம் - வானிலை ஆய்வு மையம் | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் வழக்கத்தை விட 84 சதவிகித மழைப்பொழிவு அதிகம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

#JUSTIN: வடகிழக்கு பருவமழை; கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Kumudam News 24x7

#JUSTIN: வடகிழக்கு பருவமழை; கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Kumudam News 24x7

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர்.. பழுதான வாகனங்கள்

சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சென்ற வாகங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"நெனச்சா பயமா இருக்கு.. கஷ்டப்படுவதே தலையெழுத்து" - ஆட்டோ ஓட்டுநர் வேதனை

சென்னை சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அவதி அடைந்து வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இணையவழி வகுப்புகள் நடத்தக் கூடாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் கனமழை முடியும் வரை இணைய வழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

அறுந்து விழுந்த மின்கம்பி.. மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு ராஜ வீதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 24 வயது நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Chennai Red Alert: சென்னைக்கு இன்றே ரெட் அலர்ட்..! இயல்பை விட 81% கூடுதலாக மழை... மக்களே உஷார்!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் இயல்பை விட 81% அதிகம் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி; சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் கனமழை காரணமாக 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

அறுந்து விழுந்த மின்கம்பி.. 4 மாடுகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அருகே மூலச்சேரியில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் உயிரிழந்தன. மாட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 

24 மணி நேரத்தில் எங்கேயும் மின்தடை இல்லை... களத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எங்கேயும் மின் தடை இல்லை என்றும் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொட்டித் தீர்க்கும் கனமழை... மழைநீரோடு கழிவுநீர் கலக்கும் அவலம்

சென்னை முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் பெரம்பூர் நெடுஞ்சாலை ஜீவா ரயில் நிலையம் அருகே கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதை உடனடியாக சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை எச்சரிக்கை... மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கோடிகளில் கார் பந்தயம்.. கட்டுப்பாட்டு அறையில் ஆள் இல்லை.. சீமான் கொந்தளிப்பு

பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Chennai Rain: சென்னையை மிரட்டும் கனமழை... நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..? உதயநிதி சொன்ன அப்டேட்!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 930 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை... முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை..

சென்னையின் புரசைவாக்கம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். 

3 வேளையும் இலவச உணவு.. வெளியானது சென்னையில் உணவுக் கூடங்களின் பட்டியல்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொட்டி தீர்த்த கனமழை.. தேங்கிய மழைநீர்.. பொதுமக்கள் அவதி

கனமழையில் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

“பல இடங்களில் தண்ணீர் தேக்கம்... சென்னை மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்...”ராமதாஸ் விளாசல்!

6 செ.மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் தமிழக அரசு மீதும், சென்னை மாநாகராட்சி மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

3 வேளையும் உணவு... சென்னை மாநகராட்சியின் ஏற்பாடு...

சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.