ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப்: அஸ்வின் கூறும் அந்த வீரர்கள் யார்?
ரியாஸ் ஹாசன் மற்றும் பஹிர் ஷா இருவரையும் அஸ்வின் ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியாவின் நொய்டாவில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஃப்கானிஸ்தானின் இரண்டு வீரர்கள் குறித்து மிகவும் சிலாகித்துள்ளார். குறிப்பாக அந்த இரண்டு வீரர்களை இந்தியாவின் யுவராஜ் சிங் மற்றும் முஹமது கைஃப் இருவருடனும் ஒப்பிட்டுள்ளதுதான் ஹைலைட்.
2000ஆம் ஆண்டுகளில் எதிரணிகளை கலங்கடித்த, இந்திய அணியின் முக்கிய ஜோடி தான் யுவராஜ் சிங் மற்றும் முஹமது கைஃப். ஒரு காலகட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் ஆட்டமிழந்த பின் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிடுவார்கள். தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் அசாருதீன், அஜய் ஜடேஜா வரை ஓரளவுக்கு பார்ப்பார்கள்.
மேலும் படிக்க: ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப்: அஸ்வின் கூறும் அந்த வீரர்கள் யார்?
பிறகு ராபின் சிங், முகமது கைஃப் வருகைக்குப் பின், ஆட்டம் இறுதிவரை போகும் என்ற நம்பிக்கை பிறந்தது. இந்திய கிரிக்கெட் அணிக்கு கங்குலி பொறுப்பேற்ற பிறகு, இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது. கங்குலி தனது தொடக்க இடத்தை வீரேந்தர் சேவக் மற்றும் கவுதம் கம்பீருக்கு விட்டுக்கொடுத்தது வரலாறு.
அதேபோல், தோனி, யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, இர்ஃபான் பதான், ஸ்ரீசாந்த், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் என இளம்படை வெளிநாடுகளிலும் வென்று அசத்தியது. அந்த வரிசையில், யுவராஜ் சிங் - முஹமது கைஃப் கூட்டணி பல போட்டிகளில் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்தது.
குறிப்பாக, 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, நாட்வெஸ்ட் தொடரை கூறலாம். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் எடுத்திருந்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
மேலும் படிக்க: இங்கிலாந்துக்கே ‘பேஸ்பால்’ கிரிக்கெட்டை காண்பித்த நிசங்கா.. திருப்பி அடித்த இலங்கை..
விரேந்திர சேவக் - சவுரவ் கங்குலி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்திருந்தனர். சவுரங் கங்குலி (60), வீரேந்திர சேவக் (45), இருவரும் வெளியேறிய பின்னர், தினேஷ் மோங்கிய (9), சச்சின் டெண்டுல்கர் (14), ராகுல் டிராவிட் (5) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இதனால், இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் மட்டுமல்ல, இந்திய ரசிகர்களே நினைத்திருப்பார்கள். ஆனால், அதன்பின் இணைந்த யுவராஜ் சிங், முஹமது கைஃப் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
யுவராஜ் சிங் 69 ரன்கள் எடுத்து வெளியேறிய போதும், கடைசிவரை களத்தில் இருந்த முஹமது கைஃப் 75 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் தான், சவுரவ் கங்குலி ஆக்ரோஷத்தில் தனது மேல் சட்டையை கழற்றி சுழற்றி, வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தது அனைவரும் அறிந்தது.
இந்நிலையில், இதுகுறித்து கூறியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “இந்த போட்டி, ஒரே டெஸ்ட் என்பதால் பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆப்கானிஸ்தான் அணி நம்பமுடியாத அளவிற்கு அபாரமான வீரர்களை உருவாக்கி உள்ளதை அனைவரும் அறிவோம், அதே சமயம், அவர்களுக்குத் தேவையானது, திடத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட பேட்டிங் துறை தான்.
அவர்களிடம் இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மத் ஷா என இரண்டு அட்டகாசமான பேட்டர்கள் உள்ளனர். ஆனால், அவர்களை பின்பற்றுவதற்கு தான் போதுமான ஆட்கள் இல்லை, அதனால் தான், ரியாஸ் ஹாசனும், பஹிர் ஷாவும் எப்படி தங்களது பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
இருவருமே நம்பிக்கைக்குரிய வீரர்கள். மேலும் அவர்களின் முதல்தர சராசரிகள் 55ஐ தாண்டியுள்ளது. அவர்கள், இருவரும் 2,000வது ஆண்டுகளில் யுவராஜ் சிங், முஹமது ஹைஃப் இருவரும் 19 வயதிற்குட்டோருக்கான போட்டிகளில் இருந்து வந்தனரோ, அதேபோல், எதிர்காலத்தில் வருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
22 வயதாகும் ரியாஸ் ஹாசன் (Riaz Hassan) முதல் தர போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் [56.31 சதவிகிதம்] விளையாடி 901 ரன்களை குவித்துள்ளார். அதில் 3 சதங்களும், 3 அரைசதங்களும் அடங்கும். 24 வயதாகும் பஹிர் ஷா (Bahir Shah) 69 இன்னிங்ஸ்களில் [59.16 சதவிகிதம்] 3,254 ரன்களுடன் நம்பமுடியாத அளவிற்கு பேட்டிங் பர்ஃபார்மஸ் செய்துள்ளார். அதில் 10 சதங்களும், 14 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?