தவெகவினருக்கு அனுமதி மறுப்பு – போலீசார் தடுத்ததால் பரபரப்பு
ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் 15 அடி உயரத்திற்கு 30 அடி அகலத்திற்கும் கட்டிடத்தின் மேல் பகுதியில் பேனர் வைக்கும் பணியை தவெகவினர் மேற்கொண்டனர்

தமிழக வெற்றிக் கழகம் சென்னை புறநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் சென்னை ஆலந்தூரில் எம்.கே.என் சாலையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தவெக பேனர்
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஹரிஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைப்பதற்காக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தரவுள்ளார்.
Read more: ‘எம்புரான்’ பட சர்ச்சை–நடிகர் மோகன்லால் வருத்தம்
அவரை வரவேற்கும் விதமாக ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் 15 அடி உயரத்திற்கு 30 அடி அகலத்திற்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் பேனர் வைக்கும் பணியை மேற்கொண்டனர்.
போலீசார் அனுமதி மறுப்பு
அப்பொழுது அங்கு இரவு ரோந்து பணியில் வந்த போலீசார், பொதுமக்கள் அதிகம் சென்று வரக்கூடிய இந்த பகுதியில் இவ்வளவு பெரிய பேனர் வைக்கக்கூடாது எனவும் முறையான அனுமதி பெறவில்லை எனவும் பேனரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு தவெகவினர் வருகை தந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Read more: RR vs CSK: தொடர் தோல்வியில் சிஎஸ்கே... முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்!
What's Your Reaction?






