உலக அரசியலில் மிக முக்கியத் திருப்பமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்தாகியுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஆகியோர் இந்த அமைதி ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இதன் முழுமையான இறுதி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாக இன்னும் 60 நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.28 லட்சம் கோடி நிதியுதவியும் 14 அம்சங்களும்
ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு 14 அம்சங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சமாக, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை ஈரான் நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து சுமார் ரூ.28 லட்சம் கோடி மதிப்பிலான பிரம்மாண்ட நிதி உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
டிரம்பின் எச்சரிக்கை
பிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த அமைதி ஒப்பந்தத்தின்படி ஈரானால் இனி ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது விலைக்கு வாங்கவோ முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். அதேநேரம், மற்ற நாடுகளிடம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கும்போது ஈரானிடம் மட்டும் அவை இல்லாமல் இருப்பது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த உடன்படிக்கையின்படி ஈரான் சரியாக நடக்காவிட்டால், அந்நாட்டின் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்தப்படும் என்றும் டிரம்ப் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

LIVE 24 X 7