ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. லாக் ஆன புதுச்சேரி.. மிஸ் ஆன சென்னை
4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.
4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் நிலையில், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை
திருவள்ளூர் யமுனா நகரில் வெள்ள நீர் வடியாததால் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் அவதி
செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3,675 கன அடியில் இருந்து 4,217 கன அடியாக அதிகரித்து உள்ளது.
19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலைய அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்
மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை மட்டும் எடுத்துகொண்டு குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.
ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் - வானிலை ஆய்வு மையம்
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை பெரம்பூர் ஜமாலியாவில் நீரில் மூழ்கிய சாலைகள்
சென்னையில் பெய்து வரும் கனமழையால், 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக கடலூரில் உயர்கோபுர மின்விளக்குகளை அகற்றும் பணி தீவிரம்
சென்னையில் தொடர் கனமழைக்கு இடையிலும் சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள்
10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 7 செ.மீ மழைபதிவாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை
கர்நாடகாவில் 20 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 40 வயது பெண்ணின் உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.