K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தலைநகரில் அதிகரிக்கும் போதைப்பொருள்... இன்ஸ்டாகிராமில் மெத்தப்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது..!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளுடன் சுற்றி வந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிறையில் இருந்து போது போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து த.வெ.க தலைவர் விஜய் புகார் அளிக்கிறார் 

எல்லா சூழல்களிலும் அண்ணணாக, அரணாக நிச்சயம் நிற்பேன் - த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் வன்கொடுமை சம்பவம்... தேசிய மகளிர் ஆணையம் விசாரணை..!

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஈஷா கிராமோத்சவம் - சத்குரு உறுதி

ஐந்து ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள ஏழு லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம் நடைபெறும் என சத்குரு தெரிவித்துள்ளார்.

பாட புத்தகத்தில் நல்லகண்ணுவின் வரலாறு.. தமிழக அரசுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம்..!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். அப்போது சேவாக் உடன் செல்ஃபி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் விழா மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

எதேச்சதிகாரத்தை வெல்வோம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

“திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாமக தலைவர் அன்புமணி

கட்சியின் பொதுக்குழுவின் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.