K U M U D A M   N E W S

தமிழ்நாடு

இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி முன்பதிவு நிறைவு.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் - CPM மாநில செயலாளர் பெ. சண்முகம்

மாநில அரசாங்கத்திற்கு இடப்புறமாக இருக்கக்கூடிய ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞானசேகரனால் வந்த வினை.. மண்டபம் தெருவில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி...!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் வசிந்து வந்த வீடு கோயிலுக்கு சொந்தமானது என்று தகவல் வெளியான நிலையில், அப்பகுதியில், சோதனை மேற்கொண்ட நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரி 20க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்லாவரம் நகராட்சி முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

போதைப்பொருள் வழக்கு.. மன்சூர் அலிகான் மகனிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்ற உத்தரவு

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. காவல்துறை முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசு பிரதிநிதி நீக்கம்..? யுஜிசி புதிய விதிமுறை

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் அரசு தரப்பில் இடம் பெறக்கூடிய பிரதிநிதி இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. 

உருவ கேலி செய்ததால் நடந்த விபரீதம்.. பள்ளி நண்பரை ஒரே குத்தில் கொன்ற இளைஞர்

உருவ கேலி செய்ததால் பள்ளி நண்பரை இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.