திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கமான இடங்களைத் தவிர திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவு உடனடியாக நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இதனிடையே, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் மேல்முறையீடு செய்ய இவ்வளவு தாமதம் ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆவணங்களை மொழிபெயர்க்கவே காலதாமதம் ஏற்பட்டதாகத் தமிழக அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.
மேலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுக்கள் குறித்து முழுமையாக விசாரித்த பிறகே எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று தெளிவுபடுத்தினர். இத்துடன், தமிழக அரசின் மேல்முறையீடு தொடர்பாக மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

LIVE 24 X 7