சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த தவெக கொடிகளை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய தலைமைச் செயலக திட்டம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முள்ளிக்குப்பம், முள்ளிநகர் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்களிடமும் மீனவர்களிடமும் எந்தவித கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தாமல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தை அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆட்சிக்கு வந்த புதிதில் அரசு கஜானாவில் பணம் இல்லை எனக் கூறிய முதலமைச்சர் விஜய், தற்போது தலைமைச் செயலகம் கட்ட ரூ.1,200 கோடி எவ்வாறு ஒதுக்கீடு செய்தார் என மீனவ சங்கப் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திரையில் மீனவர்களுக்கு ஆதரவாக நடித்துவிட்டு, நிஜத்தில் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டம் குறித்து எந்தக் கவனமும் செலுத்தாமல் இருப்பது நியாயமல்ல என்றும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
தேர்தல் காலத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களது படகுகள் மற்றும் வீடுகளில் கட்டி வைத்திருந்த தவெக கொடிகளை மீனவர்கள் தீவிரமாக அகற்றி வருகின்றனர். கொடிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாகக் கருப்புக் கொடிகளைக் கட்டி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மீனவர்களின் இந்த அதிரடி நடவடிக்கை ஆளும் தவெக அரசுக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7