தமிழ்நாடு

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... மீண்டும் அதிரடியாய் சரிந்த தங்கம் விலை !

தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை குறைந்து புதிய விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... மீண்டும் அதிரடியாய் சரிந்த தங்கம் விலை !
Gold Rate Drops Again!
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இன்றைய தங்கம் விலை நிலவரம் :

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.14,125 ஆக இருந்தது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் "ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து, தற்போது ரூ.1,12,320-க்கு" விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை "ரூ.85 குறைந்து ரூ.14,040" ஆக உள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை :

தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டாலும், வெள்ளி விலை கடந்த 4 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது.

அதன்படி, "சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும்" விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் தினசரி விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.