தமிழ்நாடு

இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!

இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !
Rain Chances Increase Today !
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே மழை பதிவாகியுள்ள நிலையில், இன்று (19-09-2026) மற்றும் நாளை (20-09-2026) பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிலவும் வானிலை அமைப்பு :

சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழ்நாடு பகுதிகள் வழியாக வடக்கு - தெற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவி வருகிறது.

இந்த வானிலை அமைப்பின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டல நிலையற்ற தன்மை ஏற்பட்டு, சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19-09-2026) தமிழ்நாட்டில் மழை முன்னறிவிப்பு :

இன்று தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திண்டுக்கல், திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், நீலகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தமிழ்நாடு பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை நிலவரம் (20-09-2026) :

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையுடன், மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற மாவட்டங்களில் மழை நிலவரம் :

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற தமிழ்நாடு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு :

இன்று (19-09-2026), தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது.

எனினும், உள் தமிழ்நாடு பகுதிகளில் வெப்பநிலை சற்று உயரக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு :

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.