இந்த நிலையில், மா சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்க அரசு முன் வரவில்லை என குற்றம் சாட்டியுள்ள அதிமுக, வரும் வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் மட்டுமே தர முன்வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனைகளைப் போக்கவும், அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தப்பட்டதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என விமர்சனம் செய்துள்ள அவர், தமிழகம் முழுவதும் 'மா' பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க தமிழக அரசை இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், இதில், தொழிலாளர்கள், பொது மக்கள் என பலர் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
LIVE 24 X 7









