சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "விசிக தலைவர் திருமாவளவன் மீது தேமுதிக எப்போதும் பெரும் மரியாதை உள்ளது. கேப்டன் விஜயகாந்த் இருந்த காலம் முதலே இந்த நட்பு தொடருகிறது. 2016-ஆம் ஆண்டு 'மக்கள் நலக் கூட்டணி' அமைத்தபோது கேப்டனைச் சந்தித்து முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முன்வந்தது அண்ணன் திருமாவளவன் தான். கடந்த தேர்தலில் எனக்காக தொகுதியில் வந்து பிரச்சாரம் செய்த திருமாவளவன் மற்றும் கனிமொழிக்கு என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்குத் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது காரணம் அல்ல. விசிகவுக்கு அமைச்சரவையில் ஒரு இடம் கிடைத்ததே அவர்களின் கூட்டணி மாற்றத்திற்குக் காரணம். கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல வெளியில் இருந்து ஆதரவு தராமல், அமைச்சரவைப் பதவியைப் பெற்றுக்கொண்டு வேறு கூட்டணிக்குச் சென்றுவிட்டு, தேமுதிக மீது பழி போடுவது ஏற்புடையதல்ல.
கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவு. அதைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் மற்ற கட்சிகளுக்கு இல்லை. 2 இடங்களை வென்று அதில் ஒரு அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட விசிக, தேமுதிக மீது தேவையற்ற காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் வெளியேறினோம் எனக் கூறுவது உண்மைக்குக் புறம்பானது என்பதை மக்கள் அறிவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

LIVE 24 X 7