தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமா மேடையில் கண்ணீர்விட்டு அழுத சம்பவமும், அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் அளித்துள்ள விளக்கமும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தாராபுரத்தில் நேற்று (செப்.30) நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய தவெக வேட்பாளர் சத்யபாமா, "தலைவரைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. காசு கொடுத்துக் கூட்டத்தைக் கூட்டிப் பார்த்த காலம் போய், இங்கே மக்கள் தாமாகவே காத்துக்கிடக்கிறார்கள். புரட்சித் தலைவரே மறுபிறவி எடுத்து வந்துவிட்டது போல இருக்கிறது" என்று விஜய்யைப் புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பிடிக்காமலேயே அக்கட்சியிலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்ட அவர், சமூக வலைதளங்களில் தன்னை ஆபாசமாகச் சித்தரிப்பதாகக் கூறி மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். அப்போது அருகில் இருந்த முதலமைச்சர் விஜய், அவரது தோளைத் தட்டி ஆறுதல் கூறினார்.
சத்யபாமா அழுவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு, மேடையிலிருந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் சத்யபாமாவின் காதில் ஏதோ கூறிய பிறகே பேச்சு திடீரென உணர்ச்சிப்பூர்வமாக மாறியதாகவும் சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் பரவின.
இதனால், இந்த கண்ணீர் தற்செயலான உணர்ச்சிப் பெருக்கா அல்லது "இங்குதான் எமோஷனல் ஆக வேண்டும்" எனச் சொல்லிக் கொடுக்கப்பட்ட நாடகமா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த விமர்சனங்கள் பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் உருக்கமாகப் பதிலளித்தார்.
"என் தாயின் மீது ஆணையாகச் சொல்கிறேன்... முதலமைச்சரும் மக்களும் வெகுநேரமாக நின்று கொண்டிருக்கிறார்கள்; அதனால் நிகழ்ச்சியை விரைவாகச் முடிக்குமாறு அமைப்பாளர்கள் என்னிடம் கூறினார்கள். அதைத்தான் நான் வேட்பாளர் சத்யபாமாவிடம் சுருக்கமாகப் பேசி முடிக்குமாறு தெரிவித்தேன். அரசியல் காரணங்களுக்காக ஒரு பெண்ணின் உண்மையான கண்ணீரைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள்" என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LIVE 24 X 7