கடந்த தி.மு.க. ஆட்சியில் அசைக்க முடியாத செல்வாக்கைப் பெற்றிருந்தவர் செந்தில்பாலாஜி. அவர்மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்த நேரத்திலும் அரணாக நின்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நீதிமன்றக் கண்டனத்தையும் தாண்டி, இலாகா இல்லாத அமைச்சராக அவரை நியமித்து பாதுகாத்தார். அத்தகைய பாசத்துக்குரிய பாலாஜியை, பல்வேறு காரணங்களால் தி.மு.க. தலைமை தற்போது புறக்கணிக்கிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி, தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்ள பாதை மாறும் முடிவில் இருக்கிறார் என்பதுதான் அறிவாலய வட்டாரத்தில் நடக்கும் அனல் பறக்கும் டிஸ்கஷன்!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது தி.மு.க. தலைமை. அவ்வகையில், ஸ்டாலின் தலைமையில் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, பரந்தாமன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அளித்த பரிந்துரைகள் குறித்து விவாதிக்க தி.மு.க. செயற்குழு வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கூடவுள்ளது. இப்படியாக கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் தலைமை ஈடுபட்டிருக்கும் நேரத்தில்தான், பலசாலியான பாலாஜியின் போக்கு, உடன்பிறப்புகள் வட்டாரத்தில் உதறலை ஏற்படுத்தியிருக்கிறது.
டார்கெட் ஆன செந்தில்பாலாஜி!
இதுகுறித்து தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எப்படியும் வெற்றியை ஈட்டித் தந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடுதான் அப்போதைய அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, செந்தில்பாலாஜி மற்றும் எம்.பி.கனிமொழி ஆகிய ஏழு மண்டல செயலாளர்களை ஸ்டாலின் நியமித்தார். இதில், தேர்தல் தோல்விக்குப் பின் மற்ற மண்டலச் செயலாளர்கள் எல்லாம் பழியில் இருந்து தப்பிவிட, செந்தில்பாலாஜி மட்டும் டார்கெட் ஆனார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவும், தேர்தல் நேரத்திலும் கரூர் கம்பெனியின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டல தி.மு.க.வினர் இப்போது, நேரம் பார்த்து செந்தில்பாலாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேர்தலுக்கு முன் பாலாஜியின் பார்வை நம் மீது படாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த பல தி.மு.க. நிர்வாகிகள், இப்போது அவர்மீது வெளிப்படையாகவே புகார் தெரிவித்து மாற்றுக்கட்சிகளுக்கு பயணமாகத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, 'செந்தில்பாலாஜியிடம் இருந்து மண்டலச் செயலாளர் பதவியை பறிக்க வேண்டும். கடந்த காலங்களைப்போல் பாலாஜி பரிந்துரைப்பவர்களே மாவட்டச் செயலாளர் என்ற நிலையை மாற்ற வேண்டும். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியையே செந்தில்பாலாஜி ராஜினாமா செய்துவிட்டு, கரூருக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டும்' என்று கலகக்குரல்கள் தலைமைக்கு சென்றுள்ளன.
அதிருப்தியில் பாலாஜி!
இப்படியான, கொங்கு மண்டல தி.மு.க. நிர்வாகிகளின் மனநிலையை அறிந்த கட்சித் தலைமை, செந்தில்பாலாஜியை கைவிட முடிவு செய்துவிட்டது என்றே தெரிகிறது. எதிர்வரும் செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்துவரும் மண்டலச் செயலாளர் பதவிகள் நீக்கப்படவுள்ளன. அவ்வகையில், செந்தில்பாலாஜியின் பதவியும் பறிக்கப்படவுள்ளது. தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை தவெ.க. நியமனம் செய்துள்ள நிலையில், தி.மு.க.வில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படவுள்ளனர்.
சில மாவட்டங்களில் மட்டும் மூன்று தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமனம் நடக்கவுள்ளது.
இந்த மாற்றத்தில் கனிமொழி, நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு போன்றோர் தங்களுக்கு வேண்டியவர்களை மாவட்டச் செயலாளர்களாக பரிந்துரைத்துள்ளனர். ஆனால், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பாக செந்தில்பாலாஜி தரப்பிலிருந்து, எவ்வித பரிந்துரையையும் தி.மு.க. தலைமை கேட்கவில்லை, அப்படியே பாலாஜி கொடுத்தாலும், அதனை ஏற்க தலைமை தயாராக இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. இதனால், அப்செட்டில் உள்ள செந்தில்பாலாஜி, நிர்வாகிகளை சந்திப்பதையே தவிர்த்துவருகிறார். இரு நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவு கல்லூரி மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திலும் செந்தில்பாலாஜி பங்கேற்கவில்லை.
குதிரை பேர வழக்கு... கைவிட்ட தலைமை!
முன்னதாக தவெக எம் எல் ஏக்கள் குதிரை பேர வழக்கில் செந்தில்பாலாஜி சிக்கியதை உதயநிதியும், சபரீசனும் ரசிக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் கட்சித் தலைமையின் ஆசிர்வாதத்தோடு இந்த முயற்சிகள் நடந்திருந்தாக சொல்லப்பட்டாலும், தற்போது செந்தில்பாலாஜியை மட்டும் பலிகடா ஆக்க கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது, கோவையில் கண்டனக் கூட்டம் மாவட்டவாரியாக ஆர்ப்பாட்டம், மத்திய அரசிடம் நேரடியாக, 'தொட்டுப்பார்' என எச்சரிக்கை விடுக்கும் வகையிலான ஸ்டாலினின் வீடியோ பதிவு என தலைமையின் முழுமையான ஆதரவு கிடைத்தது.
ஆனால், தற்போதோ மின்மாற்றி ஊழல் தொடங்கி குதிரைபேர வழக்கு ஈடி, இன்கம்டேக்ஸ் வழக்கு என தொடர் நெருக்கடிக்கு, தான் உள்ளாகியுள்ள நிலையில் கட்சித் தலைமை தன்னை கைவிட்டுவிட்டதாக செந்தில்பாலாஜி நினைக்கிறார்.
ஸ்டாலினையே சந்திக்க மறுப்பு!
இதனால், உதயநிதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் யாருடனும் பாலாஜி பேசுவதில்லை. சட்டசபை நிகழ்ச்சிகளில் பெயரளவிற்கு வந்து சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்பட்டு சென்றுவிடுகிறார். இப்படியாக, செந்தில்பாலாஜி அதிருப்தியில் இருப்பதை அறிந்த ஸ்டாலின் அவரை சந்திக்க வருமாறு அழைத்தபோதும், அவர் போகவில்லை. உதயநிதி தரப்பு அவரை சமாதானப்படுத்த முன்வந்த போதும், அதற்கும் பாலாஜியிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ். பாலாஜி வழக்கமாகப் பயன்படுத்தும் மொபைல் எண்ணும் தற்போது பயன்பாட்டில் இல்லை. சில மூத்த நிர்வாகிகள் அவரிடம் பேச முயற்சித்தபோதும் ரெஸ்பான்ஸ் இல்லை. மொத்தத்தில் தி.மு.கவின் கட்டுப்பாட்டில் செந்தில்பாலாஜி இப்போது இல்லை.
இது தொடர்பாக செந்தில்பாலாஜி தன் நெருக்கமான வட்டாரத்தில் பேசும்போது, 'என்னால் கட்சிக்கு கெட்டபெயர் என சின்னவர் நினைக்கிறார். மாப்பிள்ளை சாரும் என்னை கழட்டிவிட முடிவு செய்துவிட்டார். தலைவர் மட்டும் இன்னும் என் மீது பரிவு காட்டுகிறார். அதனால் பயன் இல்லை' என்று தன் ஆதங்கத்தைக் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
பனையூர் நெருக்கடி காரணமா?
இதற்கெல்லாம் த.வெ.க.வும் ஒரு மறைமுக காரணம் என்று சொல்லப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என உறுதியாக நம்பும் விஜய், அவர்மீது நடவடிக்கை எடுக்க துடிக்கிறார். குதிரைபேர வழக்கில், பாலாஜியின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் சம்மன் வழங்கியதில் தொடங்கி, திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் அவரை நாள்தோறும் கையெழுத்துபோட வைத்தது வரை என தொடர் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. மேலும், பாலாஜியின் தம்பி அசோக்குமாரில் தொடங்கி, கரூர் கம்பெனியினர் ஒவ்வொருவரும் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
இப்படியாக, தனது சாம்ராஜ்யத்தையே முழுமையாக சரிக்கும் வகையில், தன்னுடைய பால்யகால நண்பவர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்தத்தாரர்கள், மருத்துவர்கள் என ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் டார்ச்சர் கொடுக்கப்படுவதைக் கண்டு செந்தில்பாலாஜி கலங்கிப்போயுள்ளார். மேலும், செந்தில்பாலாஜியை ஒதுக்கிவைக்க வேண்டுமென பனையூர் தரப்பில் இருந்து தி.மு.க.விற்கும் பிரஸ்ஸர் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் தெரிந்துகொண்ட செந்தில்பாலாஜி, தனது தரப்பு நியாயத்தை முதல்வர் விஜய்யிடம் கொண்டு செல்ல சில முயற்சிகளை எடுத்துவருகிறார். ஆனால், அதற்கு இதுவரை பலனில்லை.
பா.ஜ.க.வில் இணையும் பாலாஜி?
பணமோசடி வழக்கில் செந்தில்பாலாஜியை ஈ.டி., கைது செய்து 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தபோது, தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி, பா.ஜ.க.வில் சேர சம்மதித்தால் வழக்குகளை சரிசெய்துகொள்ளலாம் என பா.ஜ.க. தரப்பில் பலமுறை பேசப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு. அந்த ஆஃபரை ஏற்க முடியாது என பாலாஜி உறுதியாக மறுத்தார். ஆனால், தற்போது தி.மு.க தலைமையின் புறக்கணிப்பால் மன உளைச்சல் அடைந்துள்ள செந்தில்பாலாஜி, அந்த ஆஃபரை ஏற்கலாமா எனும் யோசனையில் இருக்கிறார். பா.ஜ.க.விலிருந்து அண்ணாமலை விலகியுள்ள நிலையில், பா.ஜ.க.வில் சேர்வதுதான் நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி என பாலாஜியின் நண்பர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து அவரிடம் வலியுறுத்திவருகிறார்கள். அதற்காக சில முயற்சிகளும் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது" என சொல்லி முடித்தார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவையில் நடந்த பாக முகவர்கள் மாநாட்டில் பேசிய ஸ்டாலின், 'செந்தில்பாலாஜியின் ஆற்றல் எதிரிகள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கிறது. எதிராளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் அவர் அனுபவித்த தொல்லைகள்போல் வேறு யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். மிரட்டலுக்குப் பயந்து முதுகு வளைந்து கும்பிடு போடுபவர்களுக்கு இடையே, எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல், நெஞ் சுரத்தோடு எதிர்த்து நிற்கிறார்' என்று பாராட்டு மழை பொழிந்தார். இந்த பாசப்பிணைப்பு தற்போது அறுந்துபோன நிலையில், எரிமலையாய் கொதித்துக்கொண்டிருக்கிறது செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் வட்டாரம். இந்த நிலையில் அவர் எடுக்கப்போகும் முடிவு, தி.மு.க. வட்டாரத்தில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் பூகம்பத்தை ஏற்படுத்தப்போவது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

LIVE 24 X 7