K U M U D A M   N E W S

இந்தியாவின் வளர்ச்சியை கிறிஸ்தவ மத போதகர்கள் அழிக்க முயன்றனர் - ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி   குற்றம் சாட்டியுள்ளார்.

வழக்கை சட்டப்படி சந்திப்போம் - மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியாதால் கைதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன்

'இப்பயாவது ருத்ராஜ் கெய்க்வாட் யாருனு தெரியுதா?'.. கம்பீரிடம் கேள்வி எழுப்பும் சிஎஸ்கே ரசிகர்கள்!

''இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சிஎஸ்கேவையும், தோனியையும் பிடிக்காது. இதனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை'' என்று சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

RSS கட்டுப்பாட்டில் உள்ளதா கல்வித்துறை? 2026-ல் திமுக தனித்து விடப்படும் - KS RadhaKrishnan Interview

RSS கட்டுப்பாட்டில் உள்ளதா கல்வித்துறை? 2026-ல் திமுக தனித்து விடப்படும் - KS RadhaKrishnan Interview

BREAKING | த.வெ.க.வை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்?

தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹா விஷ்ணு தீவிரவாதி கிடையாது.. வழக்கை சட்டப்படி சந்திப்போம் - வழக்கறிஞர் பேட்டி

மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

BREAKING | மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

#BREAKING | மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

ரெடியா நண்பா, நண்பீஸ்.. நடிகர் விஜய்யே வந்து சொல்லப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு.. என்ன தெரியுமா?

தமிழக வெற்றி கழக மாநாட்டின் முக்கிய அறிவிப்பை நாளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் வன்முறை பூமியான மணிப்பூர்.. இரு பிரிவினரிடையே மோதல்.. 6 பேர் உயிரிழப்பு!

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது மாநில பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது.

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் - ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

"சட்டம் தன் கடமையை செய்யும்" - மகா விஷ்ணு விவகாரத்தில் அமைச்சர் உறுதி

அரசு பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகா விஷ்ணு கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். 

பள்ளியில் சர்ச்சை பேச்சு.! கைதான மகாவிஷ்ணு - அன்பில் மகேஷ் விளக்கம்

மகாவிஷ்ணு கைது கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் இப்போது காவல்துறை வ்சம் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

புத்தகக் கண்காட்சியில் சாமி ஆடிய மாணவிகள்.. அமைச்சர் மூர்த்தி பரபரப்பு விளக்கம்!

''மாமதுரை என்பது எல்லா சமுதாயமும் எல்லோரும் இருக்கக்கூடியது. நமது திராவிட மாடலும் அதற்குள் அடங்கும். நானும் மாவட்ட ஆட்சியரும் பிரமாதமாக புத்தக கண்காட்சியை நடத்தினோம் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்'' என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

ரீல்ஸ் வீடியோ விபரீதம்.. போட்டுத் தள்ளிய பாம்பு!

ரீல்ஸ் வீடியோவுக்காக, பாம்புக்கு மவுத் கிஸ் கொடுத்த இளைஞரை, அந்த பாம்பு தீண்டியுள்ளது. இதனால் உடலில் விஷம் ஏறி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

RS Bharathi : மணிப்பூர், குஜராத்தை விட தமிழகத்தில் குற்றங்கள் பெரிதாக நடக்கவில்லை.. சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மகா விஷ்ணு விவகாரம்: ”ஒரு பூனையை புலியாக்கிய பெருமை திமுக அரசுக்கு..” நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்

BJP Narayanan Tirupati About Maha Vishnu Controversy : மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஒரு பூனையை புலியாக்கிய பெருமை தான் திராவிட மாடல் அரசுக்கு என விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.

அரசு பள்ளியில் ஆன்மிகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன? - அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிய சீமான்

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது 

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

மருத்துவ மாணவி கொலை: தாமதமாக வந்த சிபிஐ வழக்கறிஞர்.. கடும் கோபமடைந்த நீதிபதி!

''சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து 24 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்று நாட்டு மக்கள் கேட்கின்றனர். சிபிஐ நடந்து கொள்வதை பார்த்தால் இந்த வழக்கில் சீரியஸாக செயல்படவில்லை என்பது தெரிகிறது'' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

20 லட்சம் ரூபாய் நோட்டுகள்.. பண மாலையில் ஜொலித்த விநாயகர்

விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விநாயகர் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் விநாயகருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகளால்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் ஓய்வு?.. வைரலான பதிவால் பரபரப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்.. 48 மணி நேரத்தில் 61 பேர் உயிரிழப்பு!

போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.