ஒரே மேடையில் முதல்வர் விஜய் & திரிஷா.. வைரலாகும் வீடியோ!

ஒரே மேடையில் முதல்வர் விஜய் & திரிஷா.. வைரலாகும் வீடியோ!

சென்னையில் நடந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் திரிஷா கலந்துகொண்டனர்.

Author: Christon சினிமா

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஜார்ஜ் ரெட்டியின் மகள் ஸ்ரேயா - உஜ்வல் பெலானி திருமண விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இத்திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு மணமக்களான ஸ்ரேயா மற்றும் உஜ்வல் பெலானிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிரபல நடிகை திரிஷாவும் இந்த நிகழ்வில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆடம்பரத் திருமண நிகழ்வில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கியப் புள்ளிகளும் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக, கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற கல்பாத்தி அகோரம் இல்ல திருமணவரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய்யின் திரிஷாவும் ஒன்றாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.