தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர், தனது நீண்ட நாள் காதலரான ராஜவேலை இன்று எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன.
செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளினியாகவும் தன் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரியா பவானி சங்கர். இவர் திரையுலகிற்கு அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, அதாவது தனது கல்லூரி காலத்திலிருந்தே ராஜவேலை காதலித்து வந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த நிலையில், நேற்று மெஹந்தி சடங்கு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று, இருவீட்டார் சம்மதத்துடன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரியா பவானி சங்கரின் கழுத்தில் ராஜவேல் தாலி கட்டும் வீடியோ வெளியாகி திருமணத்தை உறுதி செய்துள்ளது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரியா பவானி சங்கர் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை.
2017-இல் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘மாஃபியா’, ‘யானை’, ‘பத்து தல’, ‘டிமான்டி காலனி 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவுடன் இணைந்து இவர் நடிப்பில் வெளியான ‘இருமுடி’ திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









