”மன்னிப்பு கேட்டே ஆகணும்..” அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் மகன் அனுப்பிய நோட்டீஸ்
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக 411 கோடி ரூபாய் மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார். சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள இந்த அரசு நிலத்தை, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்து தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
இதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறை, முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமைச் செயலர், வருவாய்த்துறை அமைச்சர், வருவாய்த்துறை செயலர்களுக்கு புகாராக அனுப்பியுள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட்டு, அமைச்சர் ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அரசு நிலம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும், நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே BSNL அலுவலகத்திற்கு அடுத்தபடி உள்ளது. அதாவது பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, GST சாலையில் அமைந்துள்ளது. இது அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இணைத்துள்ளோம்" என அறிக்கி வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த புகார் உண்மையில்லை என கூறி தங்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை தெரிவித்தாக கூறி அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் சார்பில் அவரின் வழக்கறிஞர் சரவணக்குமார் மூலம் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நிலத்தை அபகரித்ததாக தவறான செய்தியை வெளியிட்டதாகவும் , இதற்கு ஏழு நாட்களுக்குள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் 10 கோடி ரூபாய் இழப்பு வழங்கிட கோரி வழக்கு தொடர் இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீஸில், கடந்த 1991 ஆம் ஆண்டு இந்த நிலம் வாங்கபட்டதாகவும் இது தொடர்பாக சில வழக்கில் தொடர்ந்து எங்களுக்கு சாதகமாக உயர்நீதிமன்ற உத்தரவுகள் வந்துள்ளது. ஆனால் இந்த உண்மையை மறைத்து தவறான தகவல் அளித்தது எங்கள் தந்தை மற்றும் எனக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் செய்தியும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: போக்சோ வழக்கு: நடன இயக்குநருக்கு கிடைத்த ஜாமின்!
அவதூறு பரப்பும் வகையில் வெளியிடபட்டுள்ள இந்த கருத்திற்கு 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். பத்து கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லை என்றால் சட்டபடியாக சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கபடும் என அந்த வழக்கறிஞர் நோட்டீஸில் தெரிவிக்கபட்டுள்ளது.
What's Your Reaction?