சசிகலா, தினகரன், ஓபிஎஸ்... வெளியில் தெரியாமல் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை.. கே.சி.பழனிசாமி அப்டேட்
அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வெளியில் தெரியாமல், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சராகவும் பதவி வகித்தனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்ற ஓபிஎஸ், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு நடத்திய 40 நிமிட தியானம் தமிழ்நாட்டையே சென்னை மெரினாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை தொடங்கினார்.
தர்மயுத்தத்துக்கு பின் மீண்டும், அதிமுகவில் மீண்டும் இணைந்த ஓ.பி.எஸ், ஆட்சியில் துணை முதலமைச்சரானர். கட்சியின் விதிகளை திருத்தி, பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி அப்பதவியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்தார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார்.
இதை படித்தீர்களா..: பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ.. அல்லோலகல்லோலப்பட்ட சமூக வலைதளம்..
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலுக்குப் பிறகு, கட்சி விவகாரங்களில் இரட்டைத் தலைமை மத்தியில் மாற்று கருத்துக்கள் இருந்த நேரத்தில் மீண்டும் கட்சிக்கு ஒற்றை தலைமையை கொண்டு வர அதிமுக முடிவு செய்தது. மேலும், பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 16 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக வந்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்.
இறுதியாக 2023ஆம் ஆண்டு மார்ச் 28, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஓபிஎஸ் மனுக்களை தள்ளுபடி செய்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, மார்ச் 29ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றிணைந்து 'அதிமுக ஒருங்கிணைப்பு குழு' எனும் பெயரில் செயல்பட்டு வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
தங்களுடைய முயற்சியால் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் ஓ.பன்னீர் செல்வம், சசிகாலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறிய அவர்கள், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசும் காலகட்டம் நெருங்கி வருவதாகவும் கூறினர்.
மேலும் படிக்க: கோடிக்கணக்கில் மோசடி.. தனியார் தொலைக்காட்சி நிறுவனர் தேவநாதன் கைது..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, “அதிமுக தொண்டர்கள் செயலிழந்து நிற்கின்றனர். நடுநிலையாளர் வாக்குகளும் அதிமுகவிற்கு வருவதில்லை. இணைப்புக்கான முயற்சியில் ஈடுபடும் எங்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது.
மேல்மட்ட தலைவர்களாக இருப்பவர்களுக்கு பதவி ஆசை மட்டுமே இருக்கிறது. வாக்கு வங்கி குறைந்தது குறித்து, அவர்களுக்கு கவலை இல்லை. திமுக மீண்டும் ஆளும் கட்சியாக வந்து விடுவோம் என அதீத நம்பிக்கையுடன் இருக்கின்றனர். 200 தொகுதிக்கு மேல் வெற்றிபெற திமுகவினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை வளர்க்க நினைப்பது தவறில்லை. ஆனால், அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அண்ணாமலையின் விருப்பமாக உள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை தற்போது அமைத்துள்ளோம். இரண்டரை லட்சம் தொண்டர்கள் இதற்கு தயாராக உள்ளனர். அவர்கள் தனிப்பட்ட எந்த தலைவர்களுக்காகவும் இல்லை; கட்சிக்காவே இருக்கின்றனர்.
மேலும் படிக்க: என் பேரன் மீது பொய் வழக்குப் போட்டு சுட்டனர் - பிரபல ரவுடி ரோஹித் ராஜ் பாட்டி குமுறல்
அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வெளியில் தெரியாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டர்களின் அழுத்தத்தால் 6 அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைப்பு குறித்து வலியுறுத்தி பேசி வருகின்றனர்.
எங்கள் கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை. ஆனால் அதன் அழுத்தத்தால் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் குறித்து தற்போது வெளிப்படையாக கூற முடியாது. பாஜக போன்ற மதவாத, இந்துத்துவா சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விட்டுவிடக் கூடாது. அதிமுக வீழ்ச்சி அதற்கு இடம் தந்துவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?






