Thalapathy 69: விஜய்யின் தளபதி 69ல் இணைந்த லியோ பட பிரபலம்... மீண்டும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி..?

விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளின் லிஸ்ட்டை படக்குழு வெளியிட்டு வருகிறது.

Oct 3, 2024 - 22:23
Oct 3, 2024 - 22:39
 0
Thalapathy 69: விஜய்யின் தளபதி 69ல் இணைந்த லியோ பட பிரபலம்... மீண்டும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி..?
தளபதி 69 அப்டேட்

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம், எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை. வெங்கட் பிரபு இயக்கிய இத்திரைப்படம் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் உருவாகியிருந்தது. கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான கோட், இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இதனிடையே கடந்த மூன்று தினங்களாக தளபதி 69 படத்தின் அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. விஜய் – ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கிறார்.

சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ள விஜய்க்கு, தளபதி 69 தான் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் விஜய்க்கு தரமான கமர்சியல் ஹிட் கொடுக்க முடிவு செய்துள்ளார் ஹெச் வினோத். அதேநேரம் தளபதி 69 பொலிட்டிக்கல் ஜானரில் இருக்காது எனவும், இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான கமர்சியல் மூவியாக இருக்கும் என்றும் ஹெச் வினோத் ஏற்கனவே கூறிவிட்டார். இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோலும் கமிட்டாகியுள்ளதை படக்குழு கன்ஃபார்ம் செய்துவிட்டது.

அதேபோல், பிரேமலு பிரபலம் மமிதா பைஜுவும் தளபதி 69 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த வரிசையில் தற்போது கெளதம் மேனனும் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார். கோட் படத்துக்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான லியோவில், கெளதம் மேனன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 69 படத்திலும் விஜய் – கெளதம் மேனன் கூட்டணி இணைந்துள்ளது. லியோ படத்தில் விஜய்யின் நண்பராக நடித்த கெளதம் மேனன், தளபதி 69-ல் என்ன கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கெளதம் மேனனை தொடர்ந்து தளபதி 69 படத்தில் பிரியாமணியும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பருத்திவீரன் புகழ் பிரியாமணி, தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் வெளியான ஜவான், வெங்கட் பிரபுவின் கஸ்டடி படங்களில் நடித்த பிரியாமணி, இப்போது விஜய்யின் தளபதி 69 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவரது கேரக்டர் பற்றியும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல் நரேனும் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கைதி, விக்ரம் என லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் முக்கியமான நடிகராக வலம் வரும் நரேன், இப்போது தளபதி 69 படத்திலும் கமிட்டாகியுள்ளார். 

இதன் மூலம் லியோ, கோட் வரிசையில் தளபதி 69 படமும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளியான தகவல்களின் படி, தளபதி 69 படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, கெளதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கின்றனர் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow