போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..

சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Oct 2, 2024 - 13:02
 0
போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..
போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதி பாடிகுப்பம்  பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி(30) .தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த 13 ஆம் தேதி அன்று  பாடி குப்பம் பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென வீரமணியை கத்தியால் தலை மற்றும் கையில் சரமாரி வெட்டி விட்டு தப்பிச் சென்றது . இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்றுக்கூடி அந்த கும்பலை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இதில் பலத்த காயமடைந்த வீரமணியை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட வீரமணிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் போலீஸார் தப்பி சென்ற 4 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில் இந்த கொலை முயற்சி வழக்கில் முகேஷ், தீபக், அரவிந்த், காளி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபரை அலுவலகத்திற்குள் புகுந்து கொலை செய்ய வீரமணி மற்றும் கைதான குற்றவாளிகள் முயற்சி செய்திருக்கின்றனர். இதில் மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத நிலையில், வீரமணி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மீதமுள்ள 4 பேரும் வீரமணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டு வீரமணியை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

மேலும் படிக்க: இன்று நடைபெறும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு... 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பு

இது தொடர்பாக பிரபல ரவுடி கவி என்கிற கவியரசை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று (செப். 1) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தன்னை போலீசார் என்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர் சரணடைந்தாக கூறப்படுகிறது. கவியரசு கருப்பு பாலுவின் கூட்டாளி என்றும் கவியரசு மீது கொரட்டூர் ஏரியில் சினிமா பைனான்சியரை கடத்தி எரித்து கொலை செய்த வழக்கு உட்பட 15 மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறித்தும், ஆட்கடத்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்தவரை திருமங்கலம் போலீசார் தேடி வந்த நிலையில் அவரே சரணடைந்தாக தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow