போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு...அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 311 கோடி மதிப்பில் 69,500 புதிய எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிருவாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “ கும்பகோணம், அம்பாசமுத்திரம், கள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் கரூர், கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி, அரக்கோணம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் 704 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும்.
நகராட்சிகளாக தரம் உயர்வு
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய மூன்று தேர்வு நிலை நகராட்சிகளை சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். நந்திவரம், கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம் ஆகிய முதல்நிலை நகராட்சிகள் தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
Read more: டெல்லி செல்லும் இபிஎஸ் இதை செய்யுங்கள்...உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
பெரம்பலூர், ராமநாதபுரம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 311 கோடி மதிப்பில் 69,500 புதிய எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்படும். வால்பாறை நகராட்சியில் 6 கோடி மதிப்பில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும்
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் மற்றும் விருதுநகரில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
Read more: பிரபல தெலுங்கு நடிகரை காதலிக்கும் ரிது வர்மா?
மேலும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக மீஞ்சூர், திமிரி, அரூர், தேன்கனிக்கோட்டை, செஞ்சி உள்ளிட்ட பேரூராட்சிகளில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும்” என அறிவித்துள்ளார்.
What's Your Reaction?






