CSK அணியில் மீண்டும் அஷ்வின்..வரவேற்க ரசிகர் செய்த செயல்!
ஐபிஎல் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் மீண்டும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்ததை கொண்டாடும் வகையில், ஈரோட்டை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தோனி, அஸ்வின் ரவிச்சந்திரன் படத்தை போர்வையில் நெசவு செய்து அசத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் துணி வடிவமைப்பாளராக பணிபுரியும் அப்புசாமி தனது ஓய்வு நேரங்களில் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளையும், முக்கிய பிரமுகர்களையும் கணினியில் வடிவமைத்து அதனை எலக்ட்ரானிக் ஜக்கார்டு மூலம் போர்வையாக உருவாக்கி வந்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் கிரிக்கெட் தொடரில், இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும், ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் உருவங்களையும் பருத்தி நூல் மூலம் நெசவு துணியில் உருவாக்கியுள்ளார்.
சிஎஸ்கே வீரர் அஷ்வின்
தற்போது ஐபிஎல் -2025- போட்டியில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் அஸ்வின் ரவிச்சந்திரன் திரும்பியதை வரவேற்கும் வகையில் தோனி மற்றும் அஸ்வின் ஆகியோரின் உருவத்தை எலக்ட்ரானிக் ஜக்கார்டு தறி மூலம் திரைச்சீலையில் வடிவமைத்துள்ளார்.
கைத்தறி நெசவாளர் அப்புசாமி
68 அங்குள்ள நீளமும், 27 அங்குல அகலமும், 430 கிராம் எடை கொண்ட இந்த திரைச்சீலையை கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் அஸ்வினுக்கு நேரில் பரிசளிக்க ஆவலாக இருப்பதாக அப்புசாமி தெரிவித்தார்.
ஏற்கனவே இதற்கு முன்னர் இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், முன்னாள் முதலமைச்சர் கலைஞர், கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் தோனி ஆகியோரின் உருவங்களையும், சந்திராயன்-3 விண்கலத்தையும் கைத்தறி துணியில் அப்புசாமி வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More:
நெற்கொள்முதல் நிலையத்தில் முறைகேடு.. மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார்!
சீமான் வழக்கு தள்ளுபடி.. ஆவணங்களை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
What's Your Reaction?






