Elon Muck Compensation To Twitter Ex Employee : உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், 2022ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33 லட்சம் கோடி கொடுத்து விலைக்கு வாங்கினார். அப்போதிலிருந்தே ட்விட்டரில் பல மாற்றங்கள் கொண்டு வந்து சர்ச்சைக்குரிய பல்வேறு செயல்களை செய்து வருகிறார். ட்விட்டரை வாங்கியதும் அவர் செய்த முதல் வேலை பெயரை ‘X’ என மாற்றியதுதான். இது சர்வதேச அளவில் பேசுபொருளானது. இதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்களை எவ்வித சரியான அறிவிப்புகளும் காரணங்களும் இன்றி அதிரடியாக பணி நீக்கம் செய்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் ஊழியர்கள் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
சுமார் 7,500 பேர் பணிபுரிந்த ட்விட்டர் நிறுவனத்தில் பெருமளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நடவடிக்கையாக ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணி நீக்கம் செய்யப்பட்டார். ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பணி புரியும் ட்விட்டர் ஊழியர்கள், அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் பணி புரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 சதவீத பணியாளர்கள் பணீ நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை அவசியமானது என எலான் மஸ்க் நியாயப்படுத்தியுள்ளார். ‘நாளொன்றுக்கு 40 லட்சம் டாலர்கள் நஷ்டமடைவதால் ட்விட்டர் நிறுவனத்தில் இத்தகைய பணி நீக்கங்கள் செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்” என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரஷ்யாவின் சுட்ஷா நகரத்தை கைப்பற்றிய உக்ரைன்
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் ரூனி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை விலை கொடுத்து வாங்கிய சில நாட்களிலேயே எந்த வித காரணமும் தெரிவிக்காமல் திடீரென ரூனி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் சரியான முறைப்படி இல்லாமல் இ-மெயில் வாயிலாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர், அயர்லாந்தில் உள்ள பணியிட தொடர்பு கமிஷம் எனப்படும்ட் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இதையடுத்து உரிய விசாரணையின்றி ரூனியை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்கின் X வலைதள நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.