உலகம்

டிரேக் கடலில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

சிலியின் தெற்கு முனைகள் மற்றும் அண்டை நாடான அர்ஜெண்டினாவுக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  டிரேக் கடலில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
டிரேக் கடலில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவிற்கும், அண்டார்டிகாவிற்கும் இடையிலான தொலைதூரப் பகுதியை இன்று டிரேக் பாதையில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையைப் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஆரம்பத்தில் 8.0 ரிக்டர் அளவிலான நிகழ்வாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) பின்னர் நிலநடுக்கத்தின் அளவைக் குறைத்து, அது 11 கிலோமீட்டர் (7 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தியது. அர்ஜென்டினாவின் உஷுவாயாவிலிருந்து தென்கிழக்கே 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்துள்ளது. தெற்கே உள்ள நகரமான உஷுவாயாவில் சுமார் 57,000 மக்கள்தொகை கொண்டது. இதேபோல் ஆக.21ம் தேதி மாலை 4:16 மணிக்கும் ஆக.22ம் தேதி (இன்று) காலை 07:46 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது.


பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சிலி கடற்கரையின் சில பகுதிகளுக்குச் சுருக்கமாக எச்சரிக்கை விடுத்தாலும், பின்னர் ஹவாய் அல்லது பிற தொலைதூர பகுதிகளுக்குச் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

சுனாமி எச்சரிக்கை

சிலியின் கடற்படை ஹைட்ரோகிராஃபிக் மற்றும் ஓசியானோகிராஃபிக் சேவையும் நிலநடுக்கத்திற்குப் பிறகு அதன் அண்டார்டிக் பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. சிலி பேஸ் ஃப்ரீ ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வடமேற்கே சுமார் 258 கிலோமீட்டர் (160 மைல்) தொலைவில் மையப்பகுதி இருந்ததாகக் குறிப்பிட்டது. இப்பகுதி தொலைதூரத்தில் அமைந்திருந்ததால், சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிலியின் தெற்கு முனைகள் மற்றும் அண்டை நாடான அர்ஜெண்டினாவுக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.