உலகம்

வயது மூப்பு காரணமாக போப் பிரான்சிஸ் காலமானார்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது 88 மூப்பு காரணமாக காலமானார் ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் திங்களன்று போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வயது மூப்பு காரணமாக போப் பிரான்சிஸ் காலமானார்!
வயது மூப்பு காரணமாக போப் பிரான்சிஸ் காலமானார்!
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் காலமானார். அவருக்கு வயது 88. இவர் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்டவர்.

2013ம் ஆண்டு போப் பதவியில் இருந்து 26வது பெனடிக்ட் விலகியதை தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார். 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார்.

போப் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்ளிட்டோர் போப் ஆண்டவரை சந்தித்து ஆசி பெற்று இருந்தார். ஈஸ்டர் நாளன்று வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்து போப் பிரான்சிஸ் கையசைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 14 தேதி நிமோனியா தொற்று காரணமாக மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது. மேலும் அவருக்கு ரத்த உறைதலுக்கு தேவையான ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஒரு மாத சிகிச்சைக்குப் பின் இல்லம் திரும்பிய போப் பிரான்சிஸ் ஓய்வெடுத்து வந்த நிலையில், தற்போது போப் பிரான்சிஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.