இந்திய ராணுவம் பதிலடி
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவனத்தின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அதிகாலை 1.05 மணி அளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியது. பஹல்காமில் நடந்த படுகொலைக்கு பதிலடியாக, இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது.
தீவிரவாதியின் குடும்பதினர் பலி
இந்த தாக்குதலில் அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் அடங்குவர் என்று ஜெய்ஷ் இ முகமது தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும், இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் தான் இன்னும் சாகவில்லை என்றும் உயிருடன் இருப்பதாக தீவிரவாதி அசார் தரப்பில்அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு அசாரால் நிறுவப்பட்ட ஜெய்ஷ் -இ முகமது, 2001 நாடாளுமன்றம், 2016 பதான்கோட் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல்கள் உட்பட இந்திய மண்ணில் பல கொடிய தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ளது. பாகிஸ்தானின் பஹவல்பூரில் பிறந்த அசார், நகரத்தில் பலத்த பாதுகாப்புடன் கூடிய வளாகத்தில் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது.