காஸா பகுதியில் நடந்து வரும் இஸ்ரேல் படையெடுப்பும், அத்துடன் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடிக்கான சர்வதேச கவலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“காஸாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நமது எதிரிகள்தான். அங்கே ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது. அந்த நிலங்களை இஸ்ரேல் குடியிருப்புக்கு மாற்ற வேண்டும்,” என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து, மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் உள்ளேயே கூட, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி (Meretz) கடும் விமர்சனத்துடன் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. “ஒரு விவேகமான நாடு, பொதுமக்களை, அதிலும் சிறுவர்களை இலக்காக கொண்டு போரிடாது. குழந்தைகளை கொல்வது பொழுதுபோக்கல்ல. இது மனிதநேயத்திற்கு எதிரான செயல்,” என கட்சி செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோஷே ஃபெயிக்லின் இது தொடர்பாக மீண்டும் விளக்கம் அளிக்க மறுத்த நிலையில், அவரின் கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவியுள்ளது. #ChildrenAreNotEnemies என்ற ஹேஷ்டேக் கீழ் உலகம் முழுவதும் பலர் இந்தக் கருத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். மோஷேவின் இந்தக் கருத்துக்கு, பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பல நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லண்டன், பாரிஸ், வியன்னா, வாஷிங்டன் போன்ற முக்கிய நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், “காஸா குழந்தைகள் பாதாளக் குழுக்களல்ல, அவர்கள் குடிமக்கள்” என்ற கோஷங்கள் எழுந்தன.
மோஷேவின் இந்தக் கருத்து, இஸ்ரேல் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், முன்னாள் எம்.பி என்பதால், இது நாட்டின் சர்வதேச பார்வையை பாதிக்கக்கூடியதாகவும், மதிப்பிழப்புக்கு காரணமாகவும் உள்ளதால், இதுபோன்ற கருத்துகள், காஸா மீது நடைபெறும் தாக்குதல்களில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்துகின்றன.