உலக நாடுகளுக்கு இடையிலான மோதல், டொனால்ட் டிரம்பின் அதிரடி வரி மற்றும் பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.275 அதிகரித்து 9,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 2,200 அதிகரித்து ரூ. 74,320-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
தங்க ஏடிஎம் மெஷின்
இந்நிலையில் தான் சீனாவில் தங்க ஏடிஎம் (ATM) மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பணத்தேவைக்காக மக்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் மணி கணக்கில் வரிசையில் காத்திருந்து பணத்தை பெறும் நிலை உள்ளது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சீனாவில் தங்க ஏடிஎம் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ’கிங்ஹுட் குழு’ என்ற நிறுவனம் சார்பில் ஷாங்காயில் உள்ள ஒரு மாலில் இந்த ஏடிஎம் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்கள் தங்க நகையை இந்த மெஷினில் வைத்தால் அது அந்த தங்கத்தின் எடை மற்றும் அதன் விலை தொடர்பான அறிவிப்பை வழங்கும். நமக்கு அந்த தொகை போதுமானதாக இருந்து ஓகே என்ற பொத்தானை அழுத்தினால் ஏடிஎம் மெஷின் அந்த நகையை உருக்கிவிட்டு அதற்கு நிகரான பணத்தை வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் 30 நிமிடங்களில் நேரடியாக செலுத்திவிடும். இதன் மூலம் நேரம் செலவிடாமல், காகித பயன்பாடு இல்லாமல் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கட்டுப்பாடுகள்
ஏடிஎம் மெஷினில் தங்கத்தை விற்பதற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 3 கிராமிற்கு மேலாக தங்க நகைகளை ஏடிஎம்-யில் வைக்க வேண்டும். நாம் விற்கும் தங்கத்தின் தூய்மையானது 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். இந்த முயற்சி மிகவும் சுலபமாக இருப்பதால் பலரும் நகைகளை விற்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.