உலகம்

இனி 16 வயதில் வாக்களிக்கலாம்.. அரசின் புதிய அறிவிப்பு

வாக்களிப்பதற்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இனி 16 வயதில் வாக்களிக்கலாம்.. அரசின் புதிய அறிவிப்பு
voting age lowered to 16 across uk
இங்கிலாந்தில் இனி 16 வயதுடையோரும் தேர்தலில் வாக்களிக்கலாம் எனப் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலுக்கு வரும் இந்த முடிவு, ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் முன் அளித்த தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. "வாக்குரிமை வயதை 16 ஆகக் குறைப்பது அதிகமான மக்கள் ஜனநாயகத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும்" என்று தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இங்கிலாந்தில் உள்ள ஒருபிரபல தொலைக்காட்சி நடத்திய சமீபத்திய ஆய்வில், 16 மற்றும் 17 வயதுடையவர்களிடையே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியே மிகவும் பிரபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அவர்களில் 33% பேர் தொழிலாளர் கட்சிக்கு வாக்களிக்க விரும்புவதாகவும், 20% பேர் வலதுசாரி சீர்திருத்தக் கட்சி வாக்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 59.7% வாக்குகளே பதிவானது. மேலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் சுமார் 7.5 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. எனவே, அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 16 வயதுடையவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முடிவு, உலக ஜனநாயக நாடுகளில் வயது அளவுகோல் குறித்து புதிய விவாதங்களை எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.