உலகம்

சீனாவில் திடீர் வெள்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு – 33 பேர் மாயம்

சீனா முழுவதும் இயற்கை பேரழிவுகள் பொதுவானவையாக உள்ளன. குறிப்பாகக் கோடையில், சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும், மற்ற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும்.

சீனாவில் திடீர் வெள்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு – 33 பேர் மாயம்
சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்
வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 33 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
காணாமல் போனவர்களை மீட்பதில் முழு முயற்சியையும் எடுக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

சீனாவில் அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை காரணமாக, அனைத்து பிராந்தியங்களும் வெள்ள அபாயங்களைக் கண்டறியும் முயற்சிகளை வலுப்படுத்துமாறு ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 7ம் தேதி முதல் கன்சுவில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருவதால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக அதிகாரிகள் இரவு முழுவதும் திடீர் வெள்ளம் குறித்த அவசர எச்சரிக்கையை வெளியிட்டிருந்தனர். இருப்பினும் பலர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 33க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பேரிடர் நிவாரணம் அறிவிப்பு

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற பீப்பிள்ஸ் டெய்லி பகிர்ந்த ஒரு காணொளியில், சேற்றில் மூழ்கியிருக்கும் மூழ்கி இருப்பவர்களைக் கயிறுமூலம் மீட்புக்குழுவினர் மீட்கும் பணிகள் மேற்கொள்வதை வெளியிட்டுள்ளன. இந்தத் திடீர் வெள்ளத்தால் ஏராளமான சாலைகள் சேறு மற்றும் பாறைகளால் மூடப்பட்டுள்ளது. கனமழையால் மலைப்பாங்கான ஜிங்லாங் பகுதியில் வசிக்கும் 4,000 பேர் சிக்கிக்கொண்டதாகவும், குப்பைகள் சாலைகளில் கொட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாலியந்தான் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சீன தீயணைப்பு அதிகாரிகள் வெய்போவில் பகிர்ந்து கொண்ட காணொளிகளில், மாலியந்தனில் மீட்புப் பணியாளர்கள், வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் மீட்டு வெளியேற்றும் காட்சிகளைப் பகிர்ந்துள்ளனர்.கன்சுவில் பேரிடர் நிவாரணத்திற்காக 100 மில்லியன் யுவான் ($14 மில்லியன்) ஒதுக்குவதாகப் பெய்ஜிங்கின் உயர்மட்ட பொருளாதார திட்டமிடுபவர் தெரிவித்தார்.
சீனாவின் இரண்டாவது பெரிய நீர்வழிப்பாதையான மஞ்சள் நதிக்கு அருகில் உள்ள சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

தெற்கு நிலச்சரிவு

சீனாவின் தெற்குப் பகுதியிலும் இந்த வாரம் பலத்த மழை பெய்துள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன ஏழு பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வாரம் குவாங்டாங் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். கனமழையால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.அங்கு மீட்பு முயற்சிகளுக்காக அரசாங்கம் 100 மில்லியன் யுவான்களை ஒதுக்கியுள்ளதாகத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், வடக்கு பெய்ஜிங்கில் பெய்த கனமழையால் 44 பேர் உயிரிழந்தனர். தலைநகரின் கிராமப்புற புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பெய்ஜிங்கைச் சுற்றியுள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் எட்டு பேர் உயிரிழந்தனர். இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.