உலகம்

புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் .. எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் எக்ஸ்பேஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க், அரசியலிலும் தனது புதிய அரசியல் பாதையை வகுக்கத் தொடங்கியுள்ளார். அவர் “America Party” (அமெரிக்கா பார்ட்டி) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சி தொடங்கிய  எலான் மஸ்க் .. எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் .. எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என இரு கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில், இந்த இரண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், டெஸ்லா நிறுவன செயல் தலைவர் எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.,


எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்த பதிவில், “மக்களுக்கு சுதந்திரமும், உண்மையான ஜனநாயகமும் வழங்கவே இந்த கட்சியைத் தொடங்குகிறேன். நம்முடைய நாடு வீணாகி கொண்டிருக்கிறது என்றும் கொள்ளையடிக்கப்படும் சூழல் காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களின் உரிமைகள் நாளேடுகளில் சிதைவடைந்து வரும் நிலையில், ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. இதனை தொடர்ந்து, உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கே திருப்பி கொடுக்கப்படுவதற்காக அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்படுகிறது என அவர் பதிவிட்டு உள்ளார். அதற்கான முன்னிலைதான் ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற கட்சி என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தலையீடுகளை குறைத்து, தனிநபர் சுதந்திரத்தை அதிகரிக்கவே இது ஒரு முயற்சி என அவர் கூறியுள்ளார். சமூக ஊடகம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற துறைகளில் மக்கள் குரலை பிரதிபலிக்க இது ஒரு அப்பீலாக இருக்கும் என எதிர்பார்ப்பு. வருங்காலத்தில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.



அதேவேளையில், இந்த அறிவிப்பு அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை “மூன்றாவது சக்தியாக உருவாகக்கூடிய ஒரு புதிய கட்சி என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

எலான் மஸ்க் தொடங்கியுள்ள புதிய கட்சி,ஏற்கனவே அமெரிக்காவிலுள்ள ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிக்கு புதிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாதக தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கு சமீபத்திய நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 2:1 என்ற மக்கள் புதிய கட்சி தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.