தொழில்நுட்பம்

Gemini AI app for kids: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக கூகுள் புதிய அறிவிப்பு!

AI பயன்பாடு என்பது நாள்தோறும் பல்வேறு துறைகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவரும் சூழ்நிலையில், குழந்தைகளுக்கான AI பதிப்பை கூகுளின் ஜெமினி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரம் இதில் பெரும் சவால்கள் இருப்பதாக டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Gemini AI app for kids: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக கூகுள் புதிய அறிவிப்பு!
Google is ready to launch on a Gemini AI app for kids
OpenAI-யின் chatGpt -4.o, Grok AI, Deep seek என AI தேடுப்பொறிக்களுக்கிடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில், தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ புதிய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகளைக் கொண்ட 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக கூகுள் தனது ஜெமினி AI சாட்போட்டை வெளியிட திட்டமிட்டுள்ளதாக (Gemini AI app for kids) தகவல்கள் வெளியாகியுள்ளது.

Gmail மற்றும் YouTube போன்ற பிற சேவைகளை குழந்தைகள் தற்போது பயன்படுத்தி வருவது போல், AI அம்சத்தையும் Family Link உள்ள கணக்குகள் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. பெற்றோர்களின் கண்காணிப்பில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்களது பாடங்கள் குறித்த சந்தேகங்கள், விளக்கங்கள் போன்றவற்றை AI மூலம் தெரிந்துக் கொள்ள இனி இயலும் என கூகுளின் ஜெமினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்திருக்கும் ஆபத்துகள்:

ஆனால், இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதற்கு காரணம், AI சாட்பாட்கள் அவற்றில் செலுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் பதில் தர பயிற்சி பெற்றிருந்தாலும், இந்த அமைப்புகள் பாலியல் துஷ்பிரயோகம், ஒரே மாதிரியான கருத்துக்கள் மற்றும் ஆபத்தான அறிவுரை உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பதில்களையும் எளிதில் உருவாக்குகின்றன.

காமன் சென்ஸ் மீடியா வெளியிட்டுள்ள ஆய்வறிகையில்,AI கருவிகள்குழந்தைகளுக்கு குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட டீனேஜர்களுக்கு "ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்களை" ஏற்படுத்துகின்றன. இந்த கருவிகளை சிறார்களால் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறது. கூகுளின் ஜெமினியும் இந்த பிரச்சினையை உணர்ந்துள்ளது. இதன் காரணமாக தான், குழந்தைகளுக்கான AI பதிப்பு வெளியீடு குறித்து வெளியிடப்பட்ட மின்னஞ்சலில், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் AI என்றால் என்ன, ஜெமினி சாட்போட்டைப் பயன்படுத்தி என்ன செய்யக்கூடாது என்பது பற்றிப் பேசுமாறு” அடிக்கோடிட்டு வலியுறுத்தியுள்ளது.

கூகுளின் இந்த நடவடிக்கை மாற்றங்களுக்கு வழிவகுக்குமா? அல்லது பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.