தமிழ்நாடு

நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா?- மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரர்

பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாத்துறாங்க, புகார் கொடுத்தால் காவல்துறை என்னையே மிரட்டுராங்க. கஷ்டப்பட்டு நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா என மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரரால் பரபரப்பு

 நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா?- மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரர்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்
மக்கள் குறை தீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் தேவசகாயம் மனு அளித்தார்.

அப்போது, எனது மச்சான் என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டான்.இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன், முறையாக விசாரிக்கவில்லை. என்னையே அழைத்து மிரட்டுகிறார்கள்.

ஆட்சியர் காலில் விழுந்து அழுதார்

நாட்டை காப்பாற்ற கஷ்டப்பட்ட எங்களுக்கு இந்த நிலைமையா? காவல்துறை சரியில்லை என தனது ஆதங்கத்தை கூறி கதறினார். உடன் வந்திருந்த அவரது மனைவி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து அழுதார்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் முன்னாள் ராணுவ வீரருக்கு ஆறுதல் கூறி, காவல்துறையை முறையாக விசாரிக்க சொல்கிறேன் என கூறிச்சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.